தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமண்டிபுரத்தைச் சார்ந்தவர் முருகன் (40),இவர் கோவை மாவட்டம் அன்னூரில் இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அங்கு கவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2023 ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் முருகன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது .
இதனை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான சாமண்டிபுரத்திற்கு கொண்டுவந்து அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் முருகனின் குடும்பத்தினர் அவர் இறந்த இரண்டு மாதங்களுக்கு பின்பாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில் முருகன் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும், அவரது உடலை தோண்டி எடுத்து உடற்கூற பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
அதன் பேரில் அன்னூர் காவல்துறையினர் முருகனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக 2023 ஆம் ஆண்டு அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
அதேபோன்று உத்தமபாளையம் வட்டாட்சியர் இடமும் மனு அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து சட்ட ரீதியான முறையில் மனுவை பரிசீலித்து ஆய்வுக்கு அனுமதி தரப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து சட்டரீதியாக முறையான ஆவணங்கள் திரட்டப்பட்டு இன்று கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் காவல்துறையினர் மற்றும் தேனி மருத்துவத்துறை குழுவினர் கம்பம் காவல்துறை உள்ளிட்டோ வரும் உத்தமபாளையம் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் முருகன் மற்றும் கவிதா ஆகியோரின் இரு குடும்பத்தினரும் அங்கு உள்ளனர்.
தொடர்ந்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்ட பின்பு அதில் கிடைக்க பெறும் உடல் பாகங்களை வைத்து ஆய்வுகள் செய்யப்பட்டு பின்னர் விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.