பாஜக தெப்பக்குளம் மாரியம்மன் மண்டல் & இரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ் மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை சார்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் இரத்த தான முகாம் பாஜக மாவட்ட தலைவர் மாரிசக்ரவர்த்தி தலைமையிலும் இரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ் கே.ஆர்.பாலன் மற்றும் மாநகர் மாவட்ட பொது செயலாளர் / பொறுப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது .

இதில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர். இந்நிகழ்வில் பிஜேபி கிளை தலைவர் குமரன், காந்திசிலை பராமரிப்பு குழு தலைவர் தேனூர் சாமிக்காளை, மண்டல் தலைவர் குமரன்சுந்தரராமன், குபேந்திரன் சாரதா, கணேஷ், யோகேஸ்வரன், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை தெற்காவணி மூல வீதியில் மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட் மற்றும் ஆயிர வைஸ்ய கல்வி நல ஆலோசனை குழு சார்பாக தலைவர் குமரேசன் தலைமையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.