அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள ஸ்ரீராம் ஹை டெக் பள்ளி வளாகத்தில், அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் ,உயிர்த்துளி இரத்தவங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் எழுத்தாளர்,சமூக ஆர்வலர் சோபனா பன்னீர்செல்வன் வரவேற்றார்.

ஸ்ரீராம் ஹை டெக் பள்ளி தாளாளர் இளவரசி பெரியசாமி,பள்ளியின் செயலாளர் பெரியசாமி,இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மேனாள் தலைவர் நல்லப்பன்,மதிமுக மாவட்ட செயலாளர் க . இராமநாதன் முன்னிலை வகித்தனர்.அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு .சின்னப்பா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, இரத்தானமுகாமினை தொடக்கி வைத்து, தொடர்ந்து கண் சிகிச்சை முகாமினை பார்வையிட்டு பேசினார்.நிகழ்வில்குளோபல் ஓவர்சீஸ் எஜுகேஷன் தலைமை நிர்வாகி டாக்டர் லட்சுமி நாராயணன்,ரியோ குளோபல் ஓவர்சீஸ் நிர்வாகி சுரேஷ்குமார்,ஆதிரா கன்சல்டன்சி சர்வீசஸ் மேலாளர் அம்ஜத் கான் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

முகாமில் 54 நபர்கள் உயிர்த்துளி இரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் பிரபாகரன் தலைமையிலான மருத்துவ குழுவினரிடம் இரத்ததானம் அளித்தனர்.தொடர்ந்து டாக்டர் அகர்வால் ஸ் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சார்பில் 35 மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு,இலவசமாக கண் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்துஅகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட்
மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தும் ஆதிரா கன்சல்டன்சி நிறுவனர் ஜெசிமா அம்ஜத்கான் சிறப்பாக செய்திருந்தார். முடிவில், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகியும் , யோகா பயிற்றுநர் ஹரிபிரசாத் நன்றி கூறினார்.






; ?>)
; ?>)
; ?>)
