

மதுரை அதிமுக மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் – சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும், அதிமுக மாநாட்டிற்கு கூலிப்படையினரால் வருகையால் அச்சுறுத்தல் – தென்மண்டல ஐஜியிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அளித்த புகாரால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எதிராக பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, தேவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் அதிமுக நடத்தும் மாநாட்டில் கருப்பு பண பறிமாற்றம் நடைபெறுவதால் இது குறித்து காவல்துறையினர் சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு காவல்துறையினர் உரிய தகவலை அளித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியும் , மாநாட்டிற்கு தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் புறக்கணிப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து கூலிப்படையினரை அழைத்துவருவதால் சட்ட ஒழுஙகு உருவாகி அச்சுறுத்தல் உள்ளதால் மாநாட்டிற்கு தடை விதிக்க கோரியும் மதுரை தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.
மேலும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில் மாநாட்டிற்கான அனுமதி நிபந்தனையை மீறி ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதிமுக மாநாட்டிற்கு அழைத்துவரும் வரும் வாகனங்களுக்கு முறையான அனுமதி இல்லாததால் வாகனங்களை தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மதுரை அதிமுக மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் நடைபெறுவதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
