தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள புற்று மாரியம்மன் ஆலயத்தில் நிரவி திருப்பட்டினம் தொகுதி பாஜக சார்பில் மாநில பட்டியலணி பொறுப்பாளர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் ஏற்பாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் மணிமாறன், தொகுதி பொதுச் செயலாளர் மனோசதீஷ், பாலாஜி, குமரவேல், ஆறுமுகம், மணிமேகலை உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசாக புடவை வழங்கப்பட்டது.




