கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
நானும், அய்யா எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம், அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை. டிபேடுக்காக இதுபோன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
debate க்காக நான் சொன்னதையும், எடப்பாடியார் சொன்னதையும் திரித்து திரித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதாவை பற்றி நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க வை பற்றி அண்ணன் எடப்பாடியாரும் தெளிவாக பேசி இருக்கிறார்.
அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பா.ஜ.க வை திட்டுவதையே நோக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை. அவர்களுக்கு தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்பதை குறிக்கோள். எது போன்ற கூட்டணி வர வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கிறார்கள். அப்படி என்றால் நானும் எடப்பாடியாரும் எப்படி ? அதை பற்றி தொடர்ந்து பேச முடியும். பத்திரிகையாளர்கள் ஆகிய உங்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால் அங்கு விமர்சனம் என்ற பெயரில் அமர்பவர்கள் என்ன தெரியும் ?. ஏ.சி ரூமில் அமர்ந்து கொண்டு பத்திரிகையில் ஒரு colum எழுதுகிறார்கள், அதை தவிர வேறு என்ன தெரியும்? அவர்களுக்கு என்று ஆவேசமாக கூறி சென்றார்.