காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் ஒன்றிய பாஜக சார்பில் கட்சியின் ஒன்றிய தலைவர் ஆர். நிஜந்தன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கீழ்வேளூர் அரசாணிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற நிகழ்வில்
கொடூர தாக்குதலை கண்டித்தும், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.