பயன்பாட்டில் இல்லாது இருக்கும் வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்க கோரி, பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்திதர்ணா போராட்டம்.
வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாய விலை கடை 2019 -2020 _ம் ஆண்டு அன்றைய நாடாளுமன்ற (மேலவை )உறுப்பினர் விஜயகுமாரால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி பரிந்துரை செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்திற்காக கட்டப்பட்ட கட்டிடம் தற்போது வரை திறக்கப்படாமல் இருப்பதாலும், நியாய விலை கடை வாடகை கட்டிடத்தில் செயல்படுவதாலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றைய தினமே கொண்டு வர வேண்டும் என்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் .ஆர். காந்தி புதிய கட்டிடத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம்.
