• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாஜக என்ற ஒரே வண்டி தான் டெல்லி செல்லும், அண்ணாமலை என்கிற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன் – கோவையில் அண்ணாமலை உரை..

BySeenu

Apr 1, 2024

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவரது பிரச்சாரத்தை துவக்கினார். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை,

இது ஒரு வித்தியாசமான தேர்தல் 10 ஆண்டுகளாக பிரதமரின் தொலை நோக்கு பார்வை எழுச்சியை காட்டுகிறது. பிரதமர் 400 எம்பி-களை தாண்டி அமர வேண்டும். 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத விஷயங்கள் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்டது.

இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடியை மீண்டும் அமர வைக்க வேண்டும்.பிரதமருக்கு போட்டியாளர்கள் இல்லை.கோவையை பொருத்தவரை 20 ஆண்டுகளாக வளர்ச்சி தொய்வில் இருக்கிறோம்.கம்யூனிஸ்ட் எம்பியால் கோவை வளர்ச்சி பின் நோக்கி சென்றுள்ளது.1440 கோடி மதிப்பிலான ஸ்மாட் சிட்டியை பார்க்க ஆள் இல்லை. உங்கள் தம்பி அண்ணாமலை அன்பை கோருகிறேன். பல்வேறு கட்சியினர் அனைவரும் ஒரு சேர வந்துள்ளார்கள்.

ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்ல வேண்டிய கடமை உள்ளது. இந்த வண்டி தான் டெல்லி போகின்ற வண்டி. அண்ணாமலை என்கின்ற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன். வேறு யாரும் இல்லை. கோவை IOB காலணியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. திமுக ஆட்சியில் குப்பைகளை தூய்மை செய்வதில் நாம் கீழே சென்று கொண்டிருக்கிறோம். குப்பை மேலாண்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறோம் என தெரிவித்தார்.