• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்

ByA.Tamilselvan

Aug 16, 2022

பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்வானார். இதற்கிடையே, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். இந்நிலையில், பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பெருமளவு நிதிஷ் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.