தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ரூபாய் ஐந்து கோடியே இருபத்தாறு லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிக்கான தொடக்க விழா காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி பூமி பூஜைக்கு முதல் செங்கல்லை எடுத்து வைத்தார்.
அவரை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் அப்பீஸ் முத்து குமார், அறநிலைய துறை ஆணையர் கல்யாணி, ஜம்புகேஸ்வரர் கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்து தொடக்க விழாவை சிறப்புற நடத்தினர்.














; ?>)
; ?>)
; ?>)