• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாரதிநகர் லேடீஸ் அசோசியேசன் 41வது ஆண்டு விழா நட்சத்திர ஓட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

BySeenu

Aug 12, 2024

கோவையில் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாரதி நகர் லேடீஸ் அசோசியேசன் நாற்பது வருடங்களை கடந்து 41 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர்,பல மொழிகளை பேசுவோர் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இணைந்து கடந்த 41 வருடங்களாக செயல் பட்டு வரும் பாரதி நகர் லேடீஸ் அசோசியேசன் 41 வது ஆண்டு துவக்க விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அரங்கில் நடைபெற்ற விழாவை அசோசியேசன் தலைவர் கரீஷ்மா ரஹேஜா,செயலாளர் காஞ்சன் வலேச்சா ஆகியோர் ஒருங்கிணைத்து. நடத்தினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சங்கீதா சேத்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து அவரது சிறந்த சமூக பணியை பாராட்டி மகிளா ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது..

தொடர்ந்து விழாவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.. இதே போல மருத்துவ உதவி தொகை, அறக்கட்டளையினருக்கு கல்வி உபகரணங்களுக்கான உதவி தொகை வழங்கப்பட்டது..

பாரதி பார்க் லேடீஸ் அசோசியேசன் குறித்து அதன் நிர்வாகிகள் கூறுகையில்,கடந்த நாற்பது வருடங்களாக இணைந்து பல்வேறு சமுதாய நல பணிகளை செய்து வருவதாகவும், குறிப்பாக மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களுக்கு நகரை தூய்மையாக வைப்பது குறித்து தொடர்ந்ரு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி வண்ண ஆடைகள் அணிந்து மேடையில் பேஷன் ஷோ,ஆடல்,பாடல் என கலைநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தனர்.