அரியலூர் அருகே உள்ள லிங்கத் தடிமேடு, சித்த சக்தி அருள்ஜோதி வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவிபெறும் கே.ஆர்.வி நடு நிலைப்பள்ளியில் மாகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ. சௌந்தரராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று , பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர் நடத்திய பத்திரிகைகள் பற்றியும், அவரது கவிதை நூல்கள் பற்றியும், அவரது மொழிப் புலமை பற்றியும், பாரதியாரின் வாழ்வும், மாணவர்களது வளர்ச்சியும் குறித்தும் எடுத்துக் கூறினார்


தொடர்ந்துவிழாவில் அரியலூர் வட்டார கல்வி அலுவலர் எழிலரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஒரு நாடு சிறந்து விளங்க நாட்டில் உள்ள குழந்தைகளுடைய கல்வி வளர்ச்சி மிக முக்கியமானது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.மேலும் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த ஆலோசனைகளையும் வழங்கினார். இறுதியில்
மாணவர்கள் பாரதியார் பற்றி பேசியும், பாடல்கள் இசைத்தும், விசைப்பலகை வாசித்தும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் இருபால் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




