• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆன்டி இண்டியன் படம் போன்று ரைட்டர் படத்தை புகழ்ந்த பாரதிராஜா

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி காவல் நிலையத்தில் பணிபுரியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ரைட்டர் நாளை வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு திரையிடப்பட்டது இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.


தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்டபடங்கள்வருவதைப்
பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது.


எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன்.


இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார் ஏற்கனவே ப்ளு சட்டை மாறன் இயக்கத்தில் டிசம்பர் 10 அன்று வெளியான ஆன்டி இண்டியன் படத்தையும் இதேபோன்று இயக்குனர் பாரதிராஜா புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.