குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் தனிச்சிறப்பு பெற்றது. தினம் தோறும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், உலகப்பந்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தரிசித்து வணங்கி, அன்னையின் அருள் பெற்ற பக்தர்கள் பகவதி அம்மனுக்கு நன்றி அறிதல் காணிக்கையாக பணம், வெள்ளி, தங்கம் காணிக்கை செலுத்துவது வாடிக்கை.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 18_உண்டியல்களும் இன்று காலை (ஜுன்23)காலை 10 மணிக்கு குமரி அறங்காவலர்கள் குழுவின் தலைவர்
பிரபா G.ராமகிருஸ்ணன், ஆணையர் முன்னிலையில் திறக்கப்பட்டு உண்டியலில் உள்ள காணிக்கை பணம் ஒவ்வொரு உண்டியலாக எண்ணும் பணி தொடங்கியது.

உண்டியல் பணம் எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் 100_க்கும் அதிகமானவர்கள். உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று மாலை காணிக்கை பணம், வெள்ளி, தங்கம் பற்றிய தகவல்கள் தெரியவரும்.
