அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் அண்மையில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 66 ஏக்கர் பரப்பளவில் உள்ள கருப்புடையான் ஏரியில் உள்ள திட்டுகளில் ஆலமரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா ,பொறியாளர் பவுன்ராஜ் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் இலந்தைக்கூடம் ஊராட்சி செயலாளர் இராவணேஸ்வரன் சோலைவனம் தன்னார்வ அமைப்பினர் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் இலந்தைக்கூடம் கிராம ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.





