• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது..,

ByKalamegam Viswanathan

Aug 15, 2025

மதுரை கலெக்டர் பிரவீன் குமார் வழங்கினார்.

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி மதுரையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மதுரை கலெக்டர் பிரவீன் குமார் கேடிஎம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

மதுரையின் அட்சய பாத்திரம்

கொரோனா இரண்டாவது அலையின் போது தொடங்கப் பெற்று மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள வரியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பசியால் தவிப்போருக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவினை மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கடந்த 1600 நாட்களாக வழங்கி வருகிறார் இவரது சேவையை பாராட்டி சமீபத்தில் புதுச்சேரிமுதல்வர் ரங்கசாமி சிறப்பு விருதினை வழங்கினார்.

இந்திய அரசின் 79வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது மதுரையில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் ஐஏஎஸ் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு விருதினை வழங்கினார்

  • சேவை விருது

விழாவில் ,கடந்த 1560 நாட்களுக்கு மேலாக மதுரையில் தெருவோரத்தில் வாழும் வரியவர்களுக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவினை வழங்கி வரும் மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி விருதுக்கான கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்வில் போலீஸ் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை டி.ஐ.ஜி அபிநவ் குமார்,எஸ்பி அரவிந்த்,டிஆர்ஓ. அன்பழகன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சாலி தளபதி உட்பட பலர் பங்கேற்றனர்.