அரியலூர்வெங்கடேஸ்வரா ஹோட்டல் கூட்டரங்கில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது.கூட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் அரியலூர் நகர செயலாளர் வி.ஸ்டாலின் வரவேற்றார் .கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவர் இளமான்சேகர்,மாநிலபொதுச்செயலாளர்கள் ஜெயசங்கர், வழக்கறிஞர் காமராசு,மாநில செயலாளர்திருமாறன்,மண்டலஒருங்கிணைப்பாளர்கள் வினோத் குமார்,ஜெயப்பிரகாஷ், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, பகுஜன் சமாஜ் கட்சியை அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்குரிய யுக்திகளை, மாவட்ட, சட்டமன்ற தொகுதி, மற்றும் நகர நிர்வாகிகளிடம் விளக்கி பேசினர் .
முன்னதாக ஆதிக்கத்தை எதிர்த்த கொள்கை தலைவர்கள் சாகுல் மகாராஜ், மகாத்மா ஜோதிபா பூலே, ஐயா நாராயண குரு , பாபா சாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் திருவுருவ படங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அரியலூர் மாவட்ட தலைவராக சா .சின்னதுரை, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக முருகானந்தம்,மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சவரி ஆனந்தம்,மாவட்டத் துணைத் தலைவராக எஸ் அய்யம்மாள், மாவட்ட பொதுச் செயலாளர் என் .ஞானசேகரன்,மாவட்ட பொருளாளராக ப.பாண்டியன்,பிவிஎஃப் நிர்வாகியாக சாக்யா சத்யா , BAMCSF நிர்வாகியாக பி .பாரத்,மாவட்ட அலுவலக செயலாளராக சுப்பிரமணியன்,மாவட்டச் செயலாளராக எஸ். உமானந்தம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிதலைவராக வினோத் (எ ) கார்த்திக்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளராக வீரபாண்டியன், திருமானூர் ஒன்றிய தலைவராக பி வெங்கடாஜலபதி, அரியலூர் நகர தலைவராக வி ஸ்டாலின்,நகர துணை தலைவராக யோகேஸ்வரன்,நகர ஒருங்கிணைப்பாளராக எம் ரகுபதி,அரியலூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக புகழேந்தி,ஆண்டிமடம் ஒன்றிய தலைவராக பாலமுருகன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக புதிய தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர். முடிவில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். உமானந்தம் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)