• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு..,

BySeenu

Jun 26, 2025

கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீ வொண்டர் வுமன் சார்பாக “ப்ரீடம் ரன் மாரத்தான் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் வீ வொண்டர் வுமன் “ப்ரீடம் ரன் 5வது பதிப்பு கற்பகம் உயர் கல்வி அகாடமி,மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து, பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம்” எனும் விழிப்புணர்வு மாரத்தான் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இதற்கான அறிமுக விழா அவினாசி சாலையில் உள்ள ஃபன் ரிபப்ளிக் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

வீ வொண்டர் வுமனின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, ரோட்டரி கோவை உதவி ஆளுநர் கவிதா கோபாலகிருஷ்ணன்,சைபர் கிரைம் புலனாய்வாளரும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சங்கர்ராஜ் சுப்பிரமணியன், கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தின் டீன் முனைவர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டு, ப்ரீடம் ரன் 5வது பதிப்பிற்கான போஸ்டர்,டீஷர்ட்,மற்றும் பதக்கம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர்.

தொடர்ந்து ஃப்ரீடம் ரன் நிகழ்வு குறித்து வீ வொண்டர் வுமனின் நிர்வாக அறங்காவலர் சுபிதா ஜஸ்டின்,செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஃப்ரீடம் ரன் நிகழ்வு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில், 5 கிமீ மற்றும் 5 கிமீ நடைப்பயணம் மற்றும் 10 கிமீ ஓட்டம் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி பூங்காவில் துவங்க உள்ள இதில், பாதுகாப்பான டிஜிட்டல் சமூகத்தை உருவாக்குவதோடு, எதிரான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறுவதாக தெரிவித்தார்.