போதை பொருள் தடுப்பு குறித்து தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் கனகாம்பாள் தலைமையிலும் முதல்வர் சரளாதேம்பாவணி முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பழக்கத்தின் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்கள் முன்னிலையில் போதை பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

கல்லூரியில் இருந்து தொடங்கிய பேரணியானது சுகுணா ஸ்டோர் அண்ணா நகர் வண்டியூர் மெயின் ரோடு உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளை கடந்து நிறைவாக கல்லூரியை வந்தடைந்தது.காவல் ஆய்வாளர் பிளவர்சீலா தலைமையில் எஸ் ஐ நித்தியா மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா லலிதா செய்திருந்தனர்.
