• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி…

ByKalamegam Viswanathan

Jul 12, 2023

சோழவந்தான் அருகே ராயபுரம் தனியார் பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு மாணவர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் “உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ மாணவர்களின் “விழிப்புணர்வு பேரணி”நடைபெற்றது. இந்தப் பேரணையானது சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வட்டப் பிள்ளையார் கோவில், ஜெனகை மாரியம்மன், கோவில் தபால் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். இதில் 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் . ஜூடி..உதவி தலைமை ஆசிரியர் .அபிராமி ஒருங்கிணைப்பாளர்கள் .சுபா மற்றும் .ரெய்ஹானா பேகம் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். முன்னதாக சோழவந்தான் தலைமை அரசு மருத்துவ அதிகாரி தீபா மற்றும் சமூக ஆர்வலரும் கல்வி வாய்ஸ் துணைப் பொது மேலாளருமான பிரேம லதாஜ உறுதி மொழி ஏற்று துவக்கி வைத்தார்கள்.