மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்கும் மேரா யுவா பாரத் Mera Yuva Bharat – கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு Unity March எனும் ஒற்றுமை பேரணி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.
இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அனைவரும் தேச ஒற்றுமைக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இப்பேரணியில் மாணவ மாணவிகள் தேசிய கொடியினை ஏந்தியும், சர்தார் வல்லபாய் பட்டேலின் புகைப்படத்தை ஏந்தியும் தேச ஒற்றுமைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.







; ?>)
; ?>)
; ?>)