• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புளியங்குடி மனோ கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByV. Ramachandran

Aug 1, 2025

தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட அணிகள் மற்றும் மை பாரத் இணைந்து ” மரமும் தாயும் மனிதனுக்கு கிடைத்த மகத்தான வரம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மேலும் இயற்கை வளங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது நமது கடமை என தலைமை உரையில் குறிப்பிட்டார். புளியங்குடி உதவி காவல்துறை ஆய்வாளர் மாடசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சிறப்புரையில் மரங்களின் மகத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து மரம் வளர்க்க வேண்டுகோள் விடுத்தார். மை பாரத் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மை பாரத் அமைப்பின் மேலாளர் சங்கர் பரிசினையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கல்யாண சுந்தரி வரவேற்புரை வழங்கினார். தமிழ்த் துறை தலைவர் முனைவர் ராமராஜ் நன்றியுரை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.