பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து நடத்திய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட பயிற்சி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்ற பொழுது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் மஞ்சள் பை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.