விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எம். புதுப்பட்டி அரசு மருத்துவமனை ,சிவகாசி அன்பால் இணைவோம் அறக்கட்டளை, இணைந்து பொதுவெளிகளில், குப்பைத்தொட்டிகளில் மற்றும் முட்புதர்களில் பச்சிளம் குழந்தைகளை வீசுவதைத் தடுத்து, குழந்தையில்லாமல் குழந்தை வேண்டி அரசிடம் பதிவு செய்து தத்தெடுத்து வளர்க்க காத்திருக்கும் பெற்றோருக்கு உதவிடும் நோக்கிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மருத்துவமனையில் இக்குழந்தைத் தொட்டில் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மருத்துவர்கள் இராஜேஷ், கெளதம், வட்டார மருத்துவ அலுவலர் மரு. வைரக்குமார், சுகாதார ஆய்வாளர் ஷேக் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபுத்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு . சாந்தி, இராஜாமுருகன் பேப்பர் ஸ்டோர் உரிமையாளர் முருகன், சாந்ததீபன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், அன்பால் இணைவோம் உறுப்பினர்கள் செல்வகணேஷ், தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்பால் இணைவோம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர்.





