இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தைகளை பாதிக்கும் முதல் நிலை நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மரத்தான் கோவையில் நடைபெற்ற நிலையில் நாடு முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.


இதயங்கள் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் பந்தய சாலை பகுதியில் நடத்தப்பட்ட இந்த மராத்தான் ஓட்டத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மரத்தை ஓட்டத்தில் குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இதயம் அறக்கட்டளை நிறுவனரும் நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், அதிகரித்து வரும் குழந்தைகளை தாக்கும் முதல் நிலை நீரிழிவு நோயால் தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் 4 லட்சம் குழந்தைகள் மிகச்சிறந்த குழந்தைகள் என்றும் தெரிவித்தார்.


மேலும் ஒவ்வொரு வருடமும் மூன்று முதல் ஐந்து சதவீதம் அதிகரித்து வருவதாகவும் உலக அளவில் இந்த நோய் பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நான்கு வேளை இன்சுலின் ஊசி போடுவதை தவிர வேறு வழியே கிடையாது என்றும் இன்சுலின் பம்ப் என்ற ஒரு சிகிச்சை முறை மட்டுமே மாற்று தீர்வாக இருப்பதாகவும் அனத் பம்பின் விலை இரண்டரை லட்சம் ரூபாய் என்றும் கூறினார். ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குழம்பி கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பிகளை எளிதில் தாக்குவதனால் இந்த முதல் நிலை நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும் குழந்தைகளுக்கு உடல் மெலிதல்,அதிக அளவிலான தாகம் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்றும் எனவே இது குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை என்றும் வலியுறுத்தினார்.




