குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நடந்த அடக்கு முறைக்கு எதிராக முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் தோற்றுவித்த அய்யாவழி. அதனை பின்பற்றி அய்யாவழியை ஏற்றுக்கொண்ட மக்களில் ஆண்கள் சாமி சன்னதியில் தலையில் தலைப்பாகை அணிந்து வழிபடும் முறையை பின்பற்ற செய்தார்.
அய்யா வழிபாட்டின் தலைமை பதியான சாமிதோப்பு தலைமைபதிவியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தலைமைப் பதவியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

தலைமைப்பதி தலைமை குரு வழக்கறிஞர் பால பிராஜாதிபதி அடிகளார் திருக் கொடியேற்றி வைத்தார். கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பக்த்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. 11_ம் நாளான செப்டம்பர் 2-ம் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.