பழனியில் மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கி தருவதாக கூறி பாஜகவிற்கு வேலை செய்வது ஏன்? இங்குள்ள அரசு திமுக அரசு தானே தவிர பாஜக அரசு அல்ல என்றும், இதுபோன்று பொது மக்களை அணுகி ஏதாவது காரியம் செய்தால் கட்டி வைத்து விடுவோம் என திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ,பா.ஜ.க நிர்வாகியை பகிரங்கமாக மிரட்டும் ஆடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.

திமுகவை சேர்ந்த பழனி நகர மன்ற தலைவி உமாமகேஷ்வரி. இவர் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற 23வது வார்டு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்ற பாஜக நிர்வாகி ஒருவர் அப்பகுதியில் உள்ள பெண்களை ஒன்றினைத்து மகளிர் சுய உதவிக் குழு அமைத்து வங்கியில் கடன் வாங்கித்தர உதவி செய்து உள்ளார். இதுகுறித்த தகவலறிந்த 23வது வார்டு திமுக கவுன்சிலரும், நகர்மன்ற தலைவருமான உமா மகேஸ்வரி கடும் எரிச்சல் அடைந்து, சம்மந்தப்பட்ட பாஜக பெண் நிர்வாகியை தொலைபேசியில் அழைத்து கடுமையாக மிரட்டும் ஆடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

அந்த ஆடியோவில் மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கி தருவதாக கூறி பாஜகவிற்கு வேலை செய்வது ஏன்? இங்குள்ள அரசு திமுக அரசு தானே தவிர பாஜக அரசு அல்ல என்றும், இதுபோன்று பொது மக்களை அணுகி ஏதாவது காரியம் செய்தால் கட்டி வைத்து விடுவோம் என்றும் பகிரங்கமாக மிரட்டும் ஆடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.