• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, கவன ஈா்ப்பு போராட்டம்

ByR. Vijay

May 5, 2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். அதன்படி நாகை அவுரி திடலில் பாஜ கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் கள் வைரமுத்து, பானு சந்திரன், ராஜேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட பார்வையாளர் முரளி கணேஷ் கலந்து கொண்டு பேசினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சோ்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தமிழக அரசு தீவிரமாக செயல்படவும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.