• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுவையில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் மீது தாக்குதல்…

ByA.Tamilselvan

Sep 27, 2022

திமுக எம்.பி. ஆ.ராசா கண்டித்தும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று புதுவையில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்களும் ஓடவில்லை. தமிழ்நாடு அரசு பேருந்துகள் மட்டுமே காலையில் இயக்கப்பட்டது. இன்று காலை சுமார் 5 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்து வந்தது. வில்லியனூர் மேம்பாலம் அருகே மின்துறை அலுவலகம் எதிரே அந்த பேருந்தை வழிமறித்த கும்பல் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டார்.
மேலும் எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்ணாடியையும் போராட்டகாரர்கள் அடித்து நொறுக்கினர். பைபாஸ் சாலையின் அருகே மற்றொரு தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லியனூர் போலீசார் பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு பேருந்தை குறி வைத்து அடுத்தடுத்து 3 இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதட்டத்தை தணிக்க வில்லியனூர் பகுதியில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.