• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பூலாம்பாடி பேரூராட்சியில் அருள்மிகு தர்மராஜா, திரவுபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் விழா

ByT.Vasanthkumar

Jul 16, 2024

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு தர்மராஜா, திரவுபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பாரத கதை பாடப்பட்டு பால் குடம் எடுத்தல், அக்னி சட்டிஎடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா 14-07-24 மாலை நடைபெற்றது. இதற்காக நல்ல தண்ணீர் குளத்திலிருந்து சக்தி அழைத்து அருளோடு புறப்பட்டு வந்த பக்தர்கள், தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பன்னாட்டு தொல்ல அதிபர் டாக்டர் பிரகதீஷ் குமார் மற்றும் பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், அரும்பாவூர், உடும்பியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.