• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பண்டிகையிள் சட்டம் ஒழுங்கை காக்க திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் கைது நடவடிக்கை – டி.எஸ்.பி இமயவரம்பன்…

ByNamakkal Anjaneyar

Nov 5, 2023

திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மல்லசமுத்திரம் எலச்சிபாளையம் பள்ளிபாளையம் குமாரபாளையம் மொளசி திருச்செங்கோடு நகரம் மற்றும் புறநகர் காவல் நிலைய எல்லை பகுதிகளில் இருந்து கஞ்சா லாட்டரி முறையற்ற நேரம் தவறி பார்கலில் மது விற்பனை என 19 வழக்குகளில் 25 நபர்கள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்

கஞ்சா விற்பனையில் மூன்று வழக்குகளில் 6 பேரும் , லாட்டரி விற்பனையில் ஐந்து வழக்குகளில் எட்டு பேரும், அரசு அறிவித்த நேரங்களில் மதுபான விற்பனை செய்யாமல் 24 மணி நேரமும் பார்களில் மதுபான விற்பனை தொடர்பான வழக்கில் 11 வழக்குகளில் இருந்து 11 பேர் என மொத்தம் திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்தில் 25 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது தீவிரமாக கைது நடவடிக்கைகள் இருக்கும் எனவும் சூதாட்டம் மற்றும் போலி மருத்துவர்கள் குறித்து கண்காணித்து வருவதாகவும் குற்றம் தொடர்பான நபர்களை மட்டும் கைது செய்யாமல் குற்ற பின்னணிக்கு காரணமான அனைத்து நபர்களையும் கைது செய்து வருவதாகவும், தற்போது தீபாவளி சமயம் நெருங்கி வருவதால் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் போது குற்ற சம்பவங்களை தவிர்க்கும் விதமாகவும், சட்ட ஒழுங்கை காப்பதற்காகவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் லாட்டரி கஞ்சா போன்ற வழக்குகளில் கைது நடவடிக்கை தொடரும் எனவும் சூதாட்டம் மற்றும் போலி மருத்துவர்கள் குறித்து கண்காணித்து வருவதாகவும் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தெரிவித்துள்ளார்.