தஞ்சை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் கோட்டை தெரு மாரியம்மன் கோவில் வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் வீரமங்கையர் நல அறக்கட்டளை சார்பாக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் சிந்தூர் வெற்றி விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ராணுவத்தரின் பணியாற்றி வரும் மற்றும் ஓய்வு பெற்ற குடும்பத்தினரின் பள்ளி மற்றும் கல்லூரி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுமார் ஐந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோன்று ராணுவத்தில் பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன் என்பவரின் மருத்துவ படிப்பிற்கான மருத்துவ உதவித் தொகையாக ரூபாய் 30,000 மற்றும் ராணுவத்தில் பணியாற்றி வரும் பாஸ்கரன் என்பவருக்கு 21,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் அவைத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் உப தலைவர் புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்கத்தின் ஆண்டு அறிக்கையை பாஸ்கரன் வாசித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ், சங்கத்தின் பொருளாளர் அமுதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு சிறப்புரையை சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி சங்கத்தின் ஆலோசகர் சுவாமிநாதன் ஆகியோர் வழங்கினர். முன்னதாக நிகழ்ச்சி தொடங்குவதற்கும் முன்பு அனைத்து ராணுவ வீரர்களும் சிலம்பாட்ட கலை நிகழ்ச்சியோடு கோனூர் நாடு பகுதியில் ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
