• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அர்ஜுன் சம்பத் பேச்சு

ByKalamegam Viswanathan

Dec 15, 2024

இந்துக்கள் சனாதான கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என மதுரையில் அர்ஜுன் சம்பத் பேச்சு…

இந்துக்கள் ஒவ்வொருவரும் சனாதன கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று மதுரையில் அர்ஜுன் சம்பத் பேசினார்.
மதுரை எஸ். எஸ். காலனி ஸ்ரீமஹா பெரியவா கோவிலில் இந்து மக்கள் கட்சி மற்றும் மதுரை அனைத்து பிராமண சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு அர்ஜுன் சம்பத் பேசியதாவது..,

தமிழகத்தில் தொடர்ந்து பிராமணர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தும், திராவிட மாடல் என்று பிராமணர்களை அவமதித்தும் வருவதை எதிர்த்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் போராட்டங்கள் நடத்தினோம்.

சனாதன எதிர்ப்பு என்ற போர்வையில் தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை திமுக மற்றும் அதன் சார்ந்த கட்சிகள் கட்டமைத்து வருகின்றனர்.

I am sorry ஐயப்ப என்ற வேறு மதத்தை சேர்ந்த இசைவானி பாடிய பாடல் ஐயப்ப பக்தர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. H.ராஜா கனிமொழி குறித்து பேசியதாக 6 மாத கால தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் இசைவனி மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க மாறுகிறது.

தொடர்ந்து சனாதன ஆதரவாளர்களை ஒடுக்க முயற்சி செய்யப்படுவதை கண்டித்து,
வருகிற ஜனவரி 5 ஆம் தேதி பிராமணர் சமுதாயத்தினர் மற்றும் இந்து சக்திகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

விசுவகர்மா என்பதை எதிர்க்கின்றனர், ஆனால் கலைஞர் கைவினை திட்டத்தை நடைமுறை படுத்த முயற்சி செய்கின்றனர். பாவ புண்ணியம் குறித்து மஹாவிஷ்ணு பேசியதாக அவர் மீது நடவடிக்கை, ஜாக்கி வாசுதேவ மீது வழக்குபதிவு என்று ஒடுக்கப்படுகின்றனர்.

சென்னையில் ஏறத்தாழ 30,000 பேர் பங்கேற்ற போராட்டத்தை வெறும் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்கின்றனர். இந்துக்கள் கோவிலுக்கு சென்றால் மட்டும் போதாது, சனாதன கொள்கைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.

கருத்தியல் மாநாட்டில் வீட்டில் பெண்கள் சமைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாது, ஆண்களுக்கு நிகராக ஆடை அணிய வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது தவறான முன் உதாரணமாக கூடும். மக்கள் மத்தியில் ஆன்மீகம் மற்றும் சமய எண்ணங்கள் தோன்றி உள்ளது.

பேட்டியின் போது, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் திருமாறன் ஜி பிள்ளைமார் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆறுமுகம் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு மதுரை மாவட்ட பிராமண சேவா சமாஜம் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி ராஜு மாவட்டத் தலைவர் ரவி மற்றும் அமைப்பு செயலாளர் ஸ்ரீ ராமன் பழங்காநத்தம் கிளைத் தலைவர் விஸ்வநாதன் மதுரை மாவட்ட தாம்ப்ராஸ் சார்பில் வெங்கடேசன் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.