• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அரியலூர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா..,

ByT. Balasubramaniyam

Sep 15, 2025

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள முன்னிட்டு அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா தலை மையில்அக்கட்சியினர் , நகராட்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள, அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் க. இராமநாதன் ,தலைமை செயற்குழு உறுப்பினர் பெ.தங்கவேல்,அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கா.பி. சங்கர், அரியலூர் நகர செயலாளர் இராம.மனோகரன், கட்சி நிர்வாகி கள் சுந்தர்,குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாகஎம்ஜிஆர் கழகம் சார்பில், கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மோகன் உள்ளிட்டோர், அண்ணா வின் திருவுருவ சிலைக்கு, அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.