நாகப்பட்டினம் நகராட்சியின் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக கவுன்சிலர்கள் திருப்புவன் கோவில் காவலாளி அஜித்குமார் போலிசார் விசாரனையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு JUSTICE FOR AJITHKUMAR என வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து வந்தனர்.

தொடர்ந்து அஜித்குமார் கொலைக்கு கண்டனம் தெரிவித்த அவர்களுக்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை அதிமுக ஆட்சியில்தானே நடந்தது. அப்போது என்ன செய்தீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அதிமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
அவர்களை நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து சமாதனப்படுத்தி அமர வைத்தார். தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது