முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், அனுமதி கிடைக்கவில்லை என சொல்லி 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின், நேற்றைய தினம் நடந்த பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஏன் 3 ஆண்டுகளாக பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள இல்லை? கலந்து கொண்டிருந்தால் தேவையான நிதியை பெற்றிருக்கலாம், திட்டங்களை பெற்றிருக்கலாம். மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் என தெரியவருகிறது. பல்வேறு துறைகளில் ஊழல் நடந்தது.
டாஸ்மாக் நிறுவனத்திலேயே பல்வேறு மட்டத்திலேயே ஊழல் நடந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கு பயந்து தான் டெல்லி கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கருத வேண்டியுள்ளது.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகக் இருந்தபோது, மோடி தமிழக வருகையின்போது கருப்பு பலூன் விட்டார். அதே பிரதமருக்கு வெள்ளை குடை பிடித்தவர் தான் ஸ்டாலின் தான்.எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைபாடு, ஆளுங்கட்சியாக வந்தபோது ஒரு நிலைபாடு என இரட்டை நிலைபாடு.முதல்வர் கடமையில் இருந்து தவறிவிட்டார்.
3 ஆண்டுகளில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் மக்கள் பிரச்சினையை சொல்லி தீர்வு காண பட்டிருக்கும்.
தமிழகத்தில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல ஆட்சியாக நடந்து வருகிறது.
பொம்மை முதல்வர் ஆண்டு வருகிறார், திறமையற்ற முதல்வர் என்பதால் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது.
அரக்கோணத்தில் பெண் 7 ஆம் தேதி கொடுக்கப்பட்ட புகார் 10 ஆம் தேதி பதிவு செய்யப்படுகிறது. சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஊடகங்களில் இந்த புகார் தொடர்பான தகவல் வெளி வந்தது கொடுமை. தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரை சந்திக்க சென்னை சென்றபோது, காவலர்கள் தடுத்து நிறுத்தி, பெண், தாயாரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனக்கு ஏற்பட்ட கொடுமை, அவலம் வேறொரு பெண்ணுக்கு நடந்திருந்தால் எப்படி புகார் அளிக்க முன் வைத்திருப்பார்.அவல ஆட்சிக்கு அரக்கோணம் சாட்சி.
கும்பகோணம், அரக்கோணம் பெண்களுக்கு நியாயம் கிடைக்க அரக்கோணம், தஞ்சையில் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆட்சியில் பெண்கள், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, மோசமான ஆட்சி நடந்து வருகிறது.
எதிர்க்கட்சியாக ஸ்டாலின் இருந்தபோது, பிரதமருக்கு கருப்பு பலூன் காட்டியவர், முதல்வர் ஆன பின் வெள்ளை குடை பிடித்தவர் பிரச்னை வந்த பின் தனிப்பட்ட முறையில் பிரதமரை முதல்வர் சந்தித்துள்ளார்.
ஏன் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற பிரதமர் சந்திக்கவில்லை?
உதயநிதி தம்பி என சொல்லப்படுவர் அவர் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்? உதயநிதி மோடிக்கு பயப்படவில்லை என சொன்ன கருத்துக்கு பதில்.இதுதான் ஆரம்பக்கட்டம், இனிமேல் வெளியே வரும்.
அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை , உங்களுக்கும் வரும் – முன்னாள் அமைச்சருக்கு மிரட்டல் வந்தது தொடர்பான கேள்விக்கு பதில்,
போதை பழக்கம் தொடர்பான சட்டமன்றத்தில் நான் சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது – நான் சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் முதல்வர் அறிக்கை வெளியிட தேவையில்லை.