தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதி மாணவர்கள் அஷ்டடோ அகடா போட்டியில் 3தங்க பதக்கங்கள் 3 வெள்ளி பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி ஆகி உள்ளனர். இதில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா சங்கம் நடத்திய நான்காவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி கோயம்பத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

அஷ்டடோ அகடா கழகத்தின் மாநில தலைவர் செந்தில்நாதன்,மாநில பொதுச் செயலாளரும் தேசிய துணைத் தலைவர் புவனேஷ்வரி,சிறப்பான ஏற்பாட்டில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் மன்சூரின் குங்-பூ – வின் உலகலாவிய தலைவர் மல்லை. சத்யா, குத்து விளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600- க்கும் மேற்ப்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துக்கொன்டனர்.
அதில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பாக ஆசான் செல்வா, சிலம்பம் சிற்பிகள் டெல்டா வேங்கை பாரம்பரிய பள்ளி தற்காப்பு கலை பயிற்சி மையம் சார்பில் வீரர் வீராங்கனைகள் முதல் இடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்றனர். போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வி. அண்டர்19,.ரோஷன், அண்டர் 16. தீக்சிதா அண்டர் அண்டர் 16. ஆகிய மூன்று பேரும்
3 தங்கம் பதக்கங்கள் மற்றும் கனிஷாதேவி, அண்டர் 12.வினோதா. அண்டர் 16.கௌதம் அண்டர் 12. ஆகிய மூன்று பேரும் 3 வெள்ளி பதக்கங்களை வென்று நம் தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் நம் பகுதிக்கு பெருமை சேர்த்தனர்.
இதில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் தேசிய போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றனர். இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் ஊரணிபுரம் சிலம்பம் சிற்பிகள் டெல்டா வேங்கை பாரம்பரிய பள்ளி தற்காப்பு கலை பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தி பாராட்டினர்,