• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக ஆளுநருக்கு பாராட்டு.., பால பிரஜாதிபதிக்கு கண்டனம்…

தமிழக ஆளுநர் கடந்த (மார்ச் 3)ம்தேதி ஆளுநர் மாளிகையில் அய்யா வைகுண்டர் பற்றிய நூலை வெளியிட்டார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து. முத்துக்குட்டி என்னும் வைகுண்டர் சனாதனத்தை ஏற்றுக்கொண்டவர். மத மாற்றத்தை எதிர்த்தவர் என கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் தெரிவித்த கருத்திற்கு, அய்யா வழி வாரிசான பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். பல்வேறு திசைகளில் கண்டனங்கள் வெளிவந்த நிலையில், அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஆன சிவசந்திரன், நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாராட்டும்,ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்ட பாலபிரஜாதிபதிக்கு கண்டனம் தெரிவித்ததோடு. சாதனம் இந்து மத கோட்பாட்டின் ஒரு அங்கம் தான் என தெரிவித்ததோடு, குமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வழி தாங்கல்கள்,7000 ம் உள்ளன. இந்த தாங்கல்கள் சார்பில், தமிழக ஆளுநருக்கு அவர்களது அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.