தமிழ் திறனறி தேர்வில் 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.ரித்திகா மற்றும் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பள்ளியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எஸ்.சஞ்சய் தலைமை வகித்தார். விழாவில் பள்ளி நிர்வாகம் சார்பில் தமிழ் திறனறி தேர்வில் 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தில் வந்த மாணவி லெ.ரித்தாகவிற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ 10 ஆயிரம் பணமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதேப்போல் 98 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3 வது இடமும் மாவட்ட அளவில் 2 வது இடமும் பெற்ற மாணவன் இ.காவியனுக்கு ரூ 6500 ரொக்கமும், 97 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3 ஆம் இடம் பெற்ற மாணவர்கள் சஞ்சிதா, ஹரிசுதன், கிருத்திகா ஆகியோருக்கு தலா 2500 ரொக்கமும், 96 மதிப்பெண் பெற்று அரசு தேர்வு பட்டியலில் இடம் பிடித்த மாணவர்கள் கயல்விழி, ரவிதா, கனிஷ்கா ஆகியோர்களுக்கு தலா 1500 ரொக்க பணம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 1500 மாணவ- மாணவிகள் பள்ளி மைதானத்தில் ஒரே நேரத்தில் நடனமாடி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். முன்னதாக காலையில் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை பள்ளியின் என்சிசி, சாரண-சாரணிய. ஜேஆர்சி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையோடு , செண்ட மேளம் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேல்நிலைப்பள்ளியின் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கு.ராஜவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மழலையர் மற்றும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் உ.பாஸ்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்களை வழிகாட்டி ஆசிரியை உதயவானி தொகுத்தி வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.




