• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி !!!

BySeenu

May 9, 2025

கடந்த ஐந்து ஆண்டுகளாக போலி பான்கார்டுகள் தயாரித்து விற்ற ஆறு பேர் கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது.

தமிழகத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் உள்ளவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் ? அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் யார் ? உள்பட பல்வேறு தகவல்களை குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் போலி பான்கார்டு தயாரிப்பதாக இந்த பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பின்னர் அவர்கள் கரூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஒரு அறையில் போலி பான்கார்டுகள் தயாரிக்கும் கும்பலை கண்டறிந்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கருர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், கார்த்திக், நவீன சேகர், சம்பத், சீனிவாசன் மற்றும் கலைவாணி ஆகியோர் என்பதும் ஆறு பேரும் சேர்ந்து போலி பான்கார்டு தயாரித்து ஆதார் கார்டு எடுக்க பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதை அடுத்து காவல் துறையினர் அந்த ஆறு பேரையும் கைது செய்து கரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 130 போலி பான்கார்டுகள், 69 செயற்கை படிவங்கள், ஒரு மடிக்கணினி, ஆறு செல்போன்கள், போலிப் பான்கார்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது

கைதான கும்பல் கடந்த ஐந்தாண்டுகளாக போலி பான்கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளனர். முதலில் போலியாக பான்கார்டு தயாரிப்பார்கள். பின்னர் அதில் சில போலியான ஆவணங்களை சேர்த்து ஆதார் கார்டு பெற விண்ணப்பம் செய்வார்கள், அதன் அடிப்படையில் ஆதார் கார்டு வந்ததும், அதை பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்று உள்ளனர். இதே போல் முதலில் போலியாக ஆவணங்களை பயன்படுத்தி, பின்னர் உண்மையான ஆதார் மற்றும் பான் கார்டுகளை பெற்று வந்தது உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,000 பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டுகள் பெற்றுக் கொடுத்து உள்ளனர். அதில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் ஒரு கார்டுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை பெற்று உள்ளனர். அவர்கள் யார் ? எந்த ? பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு எப்படி ? இந்த கும்பலுடன் அறிமுகம் ஏற்பட்டது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு எந்தப் பகுதி முகவரியை வைத்து ஆதார் கார்டு வாங்கி கொடுத்தது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? அவர்களுக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது. என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.