தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் 13வது ஆண்டு விழா மதுரையில் மாநிலத் தலைவர் முனைவர் க.திருமுருகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ஓமன் நாட்டிலிருந்து ஜேஎம்ஆர் வணிக தீர்வுகள் ஜோஸ் மைக்கிள் ராபின் ஞா, டாப் அணில் மார்க்கெட்டிங் இயக்குநர் N.சுகுமார், மதுரை மாவட்ட தொழில் மைய மேலாளர் சி. கணேசன் மற்றும் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கௌரவ ஆலோசகர் S.P.ஜெயப்பிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்து தொழில் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் சர்வதேச முன்னேற்றத்தைப் பற்றிய பார்வையை பகிர்ந்தனர். மாநிலச் செயலாளர் C.G.விஜிஸ், பொருளாளர் A.S.விஜயன், துணைத்தலைவர்கள் C.N.பால்கனி, M.செல்வம் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், மதுரையில் அப்பளம் கிளஸ்டர் உருவாக்க 486 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும் நாலு வரியை இரண்டு வரியாக மாற்றிய மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; அப்பளம், வடகம், மோர் வத்தல் மூன்றையும் ஒரே HSN கோடில் சேர்த்து 0% வரியாக்க வேண்டிய கோரிக்கையும், அப்பளம் வடகம் மோர் வத்தலுக்கு தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும், மதுரை அப்பளம் சொசைட்டி விரைவில் தொடங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மார்க்மேன் வென்ச்சர்ஸ் உடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய கட்டுப்பாட்டு புள்ளிகள்: அனைத்து கடன் விண்ணப்பங்கள் சங்கத்தின் வழியாகவே செல்ல வேண்டும்,
ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் சங்க உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி கையொப்பமிட வேண்டும், ஒவ்வொரு கடன் வாங்குபவருக்கும் தனித்துவமான சங்க ID வழங்கப்படும், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 20 வேலை நாட்களில் கடன் வழங்கப்பட வேண்டும், சங்க வழியாக மட்டுமே 5 சலுகைகள் பெறப்படும் மற்றும் பிரபு காந்தி ஜெயின் சங்கத்தின் சார்பில் ஒப்புதல், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வார். இந்த ஆண்டு விழாவில் 300க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் தமிழக முழுவதும் இருந்து கலந்து கொண்டனர் .