• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈச்சன்விளை அரசுப்பள்ளியில் ஆண்டு விழா

ஈச்சன்விளை அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு இப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.செல்வகுமார் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலர் பா.பாபு முன்னிலை வகித்தார். ஆசிரியை வாணி வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ் பாலகிருஷ்ணன் கடந்த 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டு முன்னாள் தலைமை ஆசிரியர் பொன் சாம்ராஜ் நினைவாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் எஸ் கனகராஜ், ஈச்சன் விலை ஊர் தலைவர் கி கணேசன் மார்த்தாண்டன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை டாக்டர் எம் சுந்தரலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் சி.தர்மராஜ் எஸ் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.