• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Byவிஷா

Mar 26, 2024

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 7 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நெல்லையில் ராபர்ட்ப்ருஸ் மற்றும் விளவங்கோடு தொகுதியில் தாரகைகத்பட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஏற்கனவே தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் நேற்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட்ப்ரூஸ் போட்டியிடுகிறார். விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.