• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மல்லிகையில் மலர்ந்த பேரறிஞர் அண்ணாவின் முகம்

BySeenu

Feb 3, 2024

கோவையில், பேரறிஞர் அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற வாசகத்தை நினைவு கூறும் வகையில், ஓவியர் ஒருவர் மல்லிகையில் பேரறிஞர் அண்ணாவின் ஓவியம் வரைந்து அசத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர், திமுகவை தோற்றுவித்தவரான, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று… தமிழ்நாடு இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மேலை நாடுகளுக்கு இணையான கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் முன்னேறிய மாநிலமாக வருகின்றது. அதற்கான அடித்தளமிட்ட தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா என்றால் மிகையல்ல. சமத்துவத்தை நிலைநாட்ட அவர், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திராவிட அரசியலை ஆட்சி அரியணையில் ஏற்றிய முதல் தலைவரான அண்ணா, ஒரு தத்துவ ஞானி. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒற்றுமை நல்லிணக்கத்தை போதித்த பேரறிஞர் அண்ணா, எதிர் தரப்பின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விதத்தில், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார். இன்றளவும் நமக்கு தேவைபடும் இந்த தத்துவத்தை தந்த தத்துவ ஞானியாக போற்றப்படுகின்ற பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில், கோவையை சார்ந்த ஓவியர் யு.எம்.டி. ராஜா, மல்லிகை பூவில் அண்ணாவின் ஓவியத்தை வரைந்து மலர் அஞ்சலி செய்தார். மல்லிகையில் மலர்ந்த அண்ணாவின் முகம் போலவே, அவரின் தத்துவமும் மனிதர்களின் மனங்களில் விசட்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கின்றன.