• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.., திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது-மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டி…

BySeenu

Aug 27, 2024

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார்.

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ஜி. ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை அவதூறு பேசி வருவது குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து அதிமுக எடுத்துரைத்தால், அதற்காக அண்ணாமலை வக்காலத்து வாங்குவதாகவும், தமிழகத்தில் நடைபெறும் இந்த கேலிக்கூத்தை பார்க்கும் பொழுது அண்ணாமலை ஒரு கோமாளி என நிறுபனம் ஆகிறது என்றார். எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவர் உலகம் அறிந்தவர். அப்படிப்பட்ட எம்ஜிஆர்க்கு ருக்கு நாணயம் வெளியிட்டதில், இந்திய அரசுக்கு தான் பெருமை சேர்ந்துள்ளது என்றார்.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், நாகரீக அரசியல் செய்து வருவதாகவும். அன்பு, நாகரிகம் நிறைந்த மண் தமிழகம் என்றார். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பண்பை அண்ணாமலை அவரது குடும்பத்தார் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அரவங்குருச்சியில் ஜெயிக்க வைக்க வேண்டும் என இபிஎஸ் இடம் கைகூப்பி கும்பிட்டவர் அண்ணாமலை எனக் குறிப்பிட்டார். பாஜக உறுப்பினர்களை மட்டும் தான் கும்பிட்டு ஏமாற்ற முடியும், தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழகம் வந்த போதெல்லாம் அவருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை திமுக செய்தது. இது கூட தெரியாமல் திமுகவின் நாணயம் வெளியீட்டு விழாவில், அண்ணாமலை அக்கட்சி நிர்வாகிகளை கும்பிடு போட்டு வழிந்ததாக தெரிவித்தார். திமுக அரசு ஆலோசனை வழங்கும் சுனில்லை, ரகசியமாக அண்ணாமலை சந்தித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.பல ஊழல்களில் தழைத்து வரும் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டுமே என்றார்.
விவசாயி என மார்க்தட்டும் அண்ணாமலை, விளை நிலங்களை சைட் போட்டு விற்றுக் கோடிகளை சம்பாதித்து வருவதாக தெரிவித்தார். அரசியலில் சேர்ந்து குறுகிய காலத்தில், அண்ணாமலை இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி? ஆடம்பர கார் வீடு போன்றவை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலை பணம், பணம் என்று அலைந்து கொண்டிருப்பதாகவும், என் மண் என் மக்கள் இயக்கம் மூலம் பண வசூல் செய்துள்ளதாக கூறினார். கடந்த எம்பி தேர்தலில், பண வசூல் செய்ததாக குற்றம் சாட்டினார். பாஜகவில் பல ரவுடிகளை உறுப்பினர்களாக சேர்த்து விட்டு அண்னாமலை பண வசூல் ஈடுபட்டதாக குறிப்பிட்டார்.
10வருட பாஜக ஆட்சியில், இந்திய கடன் அதிகரித்துள்ளதாகவும், தேர்தல் பத்திரம் மூலம் 6ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கூறினர். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில், பல மருத்துவம், பொறியியல், கலை கல்லூரிகள் திறக்கபட்டன என்றார்.
அத்திகடவு திட்டம், டெல்டா பாதுகாப்பு ஆகிய பல திட்டங்கள் எடப்பாடி பழிச்சாமி முதல்வராக இருந்து செயல்படுத்தியது என்றார். முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொழில் முதலீடுகள் இருக்க அமெரிக்கா செல்வது குறித்து கூறிய அவர், கடந்த சுற்றுப்பயணங்களில் இதுவரை ஒரு முதலீடு கூட தமிழகத்தில் செய்யப்படவில்லை என்றார். அவர் அமெரிக்கா செல்வது எதற்கு என்று அனைவருக்கும் தெரிந்தாலும் கூட, அவர் மீண்டும் தமிழகம் வரும் காலம் வரை மக்களை அதிமுக பத்திரமாக பார்த்துக் கொள்ளும் என்றார்.