• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை.,

ByKalamegam Viswanathan

Aug 25, 2025

மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது.

அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி அரசு அலுவலர்கள் டி முதல் எ வரை உள்ள நான்கு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் அடைத்தால் பதவி பறிபோகும் நிலை இருந்தது இதை அமைச்சர்கள் மற்றும் பிரதமர் உற்பட அனைவரும் சட்டத்தின் முன் சமம்
என்பதால் அரசியலமைப்பு 130வது பிரிவை கொண்டு வருகிறோம்,

“ஆம் ஆத்மி கட்சி முதல்வராக இருந்தஅரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கோப்புகளை பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும் இது போன்ற சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காக பிரதமர் உட்பட அனைவரையும் பதவி நீக்கம் செய்ய இந்த சட்டத்தை கொண்டு வந்தோம் இது பாஜகவிற்கு மட்டுமல்ல அனைத்து கட்சிக்குமே பொருந்தும் வகையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டது

இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது நமது முதல்வர் கூட எதிர்க்கிறார் இது சட்டத்தை அவமதிக்கும் செயல்

அமீத்ஷா வருகையின் போது கூட்டம் இல்லை என்ற கேள்விக்கு?

நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது ஊட் கமிட்டி கூட்டம் மாநாடு பொதுக்கூட்டம் அல்ல பூத் கமிட்டியில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்வர் ஒரு சில வயதானவர்கள் வந்ததாக தொலைக்காட்சியில் காண்பித்தனர் விதிவிலக்காக இருந்ததை சுட்டிக்காட்டி உள்ளீர்கள்
பூத் கமிட்டி கூட்டம் என்பதால் அந்தந்த பகுதி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

அதிமுக கூட்டணியில் முதல்வராக எடப்பாடி வருவதை அண்ணாமலை ஏற்றுக்கொள்கிறார் என அதிமுகவினர் கூறுவது குறித்த கேள்விக்கு

நான் பாஜகவில் ஒரு தொண்டன் கட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் செய்ய முடியும் தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்புகளை சொல்ல முடியாது உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக கூட்டணி உறுதியாகி எடப்பாடி முதல்வர் என்பதை உறுதி செய்த பின்பு அதைத்தான் நான் செய்ய முடியும் கட்சிக்கு கட்டுப்பட்டு தான் செயல்பட முடியும்

அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அதே போல் பாஜக தொண்டர்களின் நிர்வாகிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும்

68,000 பூத்துகள் உள்ளது பூத்திருக்கு 12 பேர் என்ற கணக்கில் லட்சக்கணக்கான நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும்

அதிமுகவிற்கு எவ்வாறு பாஜக தொண்டர்கள் உறுதியாக உள்ளனரோ அதே மாதிரி பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் 234 தொகுதிகளிலும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அண்ணன் எடப்பாடி முதலமைச்சர் ஆக முடியும்
கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் காதல் திருமணங்களை எங்களது கட்சி அலுவலகம் வரவேற்கும் எனக் கூறியது குறித்து?

ஆணவ படுகொலை சமீப அறமாக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது
200 ஆண்டுகளாக ஆணவப் படுகொலை நம்மிடையே வளர்ந்துள்ள புற்றுநோய் இதை அளிக்க வேண்டும்.

கட்சி மட்டுமல்ல எங்களது கட்சி அலுவலகத்திற்கு வருபவர்களையும் நாங்கள் பெற்றோர்களை அழைத்து பேசி சமரசமாக செய்கிறோம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பி சமரசம் செய்து வைக்கிறோம் ஆணவப் படுகொலையை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம் அனைத்து கட்சிகளும் இதனை எதிர்க்கத்தான் செய்கின்றன.

சகோதர சண்முகம் அவர்களின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர நிதி அமைச்சர் மறுப்பு குறித்து

தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு மாநில அரசின் கையில் உள்ளது ஒரு பக்கம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிவிட்டு அதை நிதி அமைச்சர் மறுக்கிறார் என்றால் தனது தொகுதியில் வருகிறது என்று எதிர்க்கிறார்

தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மகன் பதக்கம் தங்கள் கையில் வாங்க மறுத்த குறித்து

சகோதரர் டி.ஆர்.பி. பாலுவின் மகன் அவர்கள் நன்கு வளர வேண்டும் உயர்ந்த நிலை அடைய வேண்டும் அவர்
யார் கையில் வாங்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் அது குறித்து நாம் எதுவும் செய்ய முடியாது ஆனாலும் அந்த சிறுவன் மிக உயர்ந்த நிலை அடைய வேண்டும் எனது வாழ்த்துக்கள்

வரும் சட்டமன்ற தொகுதியில் எந்த தேதியில் போட்டியிடுவீர்கள் என்று கேட்டதற்கு

கிழக்கு மதுரை மேற்கு மதுரை தெற்கு எந்த தொகுதியிலும் இருக்கலாம் அல்லது நிற்காமல் போகலாம் இது குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டும் ஒருவேளை கட்சி எனது முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தை செய்ய கூறினால் அதையும் ஏற்றுக்கொள்வேன்

அண்ணாமலை உங்கள் நண்பண் திட்டம். குறித்து?

சில நண்பர்கள் எனது பெயரில் செய்ய வேண்டும் எனக் கூறினார்கள் நான் எனது பெயரை பயன்படுத்தாமல் சேவை செய்யுங்கள் எனக் கூறினேன். டெல்லியில் உள்ள நண்பர்கள் எனது பெயரை பயன்படுத்தி வருகின்றனர் ஆக்கபூர்வமாக பணிகளை செய்யுங்கள் எனக் கூறியுள்ளேன்