நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை தரவுகளை சேகரிப்பது என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுத்தி வருவதை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் அலைபேசியில் தரவுகளை சேகரிக்க EKVC, OTP மற்றும் FRS முறையை கைவிட வேண்டும்,புதிய செல்போன் 5 சி சேவை மற்றும் மையங்களில் வைஃபை சேவைகளை வழங்க வேண்டும் . போஷன் டிராக்கரில் செய்யும் பணிகளுக்கு ஊக்கத்தொகை ரூ1000 கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் ராமேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி என ஒன்றியங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.