• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடி ஊழியர் மயங்கி விழுந்ததல் பரபரப்பு..,

ByM.JEEVANANTHAM

May 4, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் பேபி தலைமையில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும் காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் நீண்ட காலம் பணி செய்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் பல்வேறு குளறுபடியை உருவாக்கும் THR திட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது சித்தர் காடு அங்கன்வாடியில் பணிபுரியும் சித்தர்காடு நைனார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கிரிஜா என்ற அங்கன்வாடி பணியாளர் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரை உடனடியாக அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதனால் போராட்ட களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.