• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆண்டி நடிகைகள் அணிவகுக்கும் சப்தம்

Byதன பாலன்

Mar 19, 2023

இயக்குநர் அறிவழகன் இயக்கி வரும் ‘சப்தம்’ படத்தில் நடிகை லைலா- சிம்ரன் இணைந்து நடிக்க உள்ளனர் நடிகை லக்‌ஷ்மி மேனன் நாயகியாகநடிக்கஏற்கனவேஒப்பந்தமாகியிருந்ததுகுறிப்பிடத்தக்கது.‘ஈரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர்
இயக்குநர் அறிவழகன்.
இவர் அடுத்ததாக நடிகர் ஆதி நாயகனாக நடிக்கும் படத்தை ஆல்பா பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சப்தம் படத்தினை தயாரித்து இயக்கிவருகிறார்.
சப்தம் படத்தின் படப்பிடிப்புகடந்த ஆண்டு டிசம்பர்14-ம் தேதி தொடங்கப்பட்டது. படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஹாரர் திரில்லராக உருவாகும் ‘சப்தம்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மூணாரில் நடந்து முடிந்துள்ளது இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் ‘சர்தார்’ படத்திலும், ‘வதந்தி’ இணையத் தொடரிலும் நடித்த நடிகை லைலா ‘சப்தம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
தற்போது, நடிகை சிம்ரன் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நடிக்கும் 50 வது படம் சப்தம் தமிழ் சினிமாவில் சிம்ரன், லைலா இருவரும்முன்னதாக பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகிகளாக நடித்து வந்த போது ஒரே படத்தில் நடித்தவர்கள் திருமணமாகி செட்டில் ஆனபின்பு மீண்டும் குணசித்ர வேடங்களில் நடிக்க தொடங்கியபின் சப்தம் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்
தமிழ் சினிமாவின் தொடர் காமெடி ஹாரர் படங்களிலிருந்து ரசிகர்கள் இளைப்பாறும் வகையில், ஒரு இனிமையான மாற்றமாக அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குநர் அறிவழகன்.ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.